சென்னை

நாளை சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்துக்  கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

`

சமீபத்தில் தலைமை தேர்தல் கமிஷனராக ஞானேஷ்குமார் சமீபத்தில் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அப்போது, மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளிடம் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து தேர்தல் விதிகளின் அடிப்படையில் அவற்றை தீர்த்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நாளை (திங்கட்கிழமை) அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பிரதான கட்டிடத்தின் 2-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் மதியம் 3 மணியளவில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.