சென்னை:
அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் வரும் 22ந் தேதி (நாளை) நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
ஏற்கனவே கடந்த 17ந்தேதி நடைபெறுவதாக இருந்த அனைத்துக்கட்சி கூட்டம், காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற இருந்தால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது உச்சநீதி மன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து உத்தரவிட்டுள்ள நிலையில், காவிரி பிரச்சினையில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கர்நாடக அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசனை செய்ய நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தை மீண்டும் கூட்டி உள்ளது.
இதுகுறித்து திமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வருகிற 22-05-2018 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 10 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் “அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்” நடைபெறும் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.