சென்னை

சென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

 

 

நாடெங்கும் தக்காளி விளைச்சல் பாதிப்பால் வரத்து குறைந்து கடந்த மாதம் ஆரம்பத்திலிருந்து அதன் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. மேலும் தொடர்ந்து விலை உயர்ந்து, சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு மேல் சென்றது

வெளி சந்தை மற்றும் சில்லறைக் கடைகளில் ரூ.200 வரை சென்றது.  பொது மக்கள் தக்காளியை வாங்க முடியாத அளவுக்கு அதன் விலை எகிறியது. இந்த மாத தொடக்கத்திலிருந்து விலை சரியத் தொடங்கியது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தக்காளி கிலோவுக்கு ரூ.70 முதல் ரூ.90 வரை குறைந்துள்ளது.

இன்று கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளியின் விலை மேலும் சரிந்துள்ளது. அதனால் கோயம்பேடு சந்தையில் தக்காளி இன்று ஒரு கிலோ ரூ.10 குறைந்து ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் தக்காளி விலை குறைந்து வருவதால் நிம்மதி அடைந்துள்ளனர்.