டெல்லி: நாடு முழுவதும் சுங்கக்கட்டணம் கட்டணம் 40% குறையும் வாய்ப்பு உள்ளதாகவும், தமிழ்நாட்டிலும் சில சுங்கச்சாவடிகளில் 40 சதவிகிதமும், சில குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் 60% கட்டணம் குறையும் என, திமுக எம்.பி. வில்சனின் கடிதத்துக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுதியுள்ள பதில் கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.
இந்தியா முழுவதும் 800க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. ,இதில் சுமார் 563 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இவற்றில் சுமார் 10 விழுக்காடு, அதாவது 48 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டு ஒருமுறை கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீதமுள்ள 21 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதிப்படும் நிலையில், சுங்கக்கட்டணம் உயர்வு பொதுமக்களுக்கு மேலும் தலைவலையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நடுத்தர மக்களும், ஏழை மக்களும், வணிகர்களும், கனரக வாகன ஓட்டிகள் என பலதரப்பட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், சங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எபந்துள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை மனு அளித்தார். இதற்கு மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதுகுறித்து திமுக எம்பி வில்சன் தனது டிவிட்ட பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக வாகனப்பதிவின் போதே ஒரு முறை சிறிய கட்டணமாக வசூலிக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தேன்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக வாகனப்பதிவின் பொழுதே ஒரு முறை சிரிய கட்டணமாக வசூலிக்க வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களிடம் பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அதற்கு பதில் அளித்துள்ள மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பொது நிதியுதவி திட்டங்களில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40% வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சாலைப்பயனாளர்களின் சுமையை குறைக்க உதவிடும் இந்த முடிவிற்காக மாண்புமிகு அமைச்சர் அவரக்ளுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
எப்படியிருந்தாலும் விரைவில் சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்றிவிட்டு வாகனப்பதிவின் பொழுதே ஒருமுறைக் சிரியா கட்டணமாக வசூலித்துக்கொள்ள ஆவண செய்யுமாறு மாண்புமிகு அமைச்சர் @nitin_gadkari அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் 40சதவிகித கட்டண குறைப்பும், குறிப்பிட்ட 9 சுங்கச்சாவடிகளில் 60சதவிகிதம் கட்டண குறைப்பும் நிகழ வாய்ப்பு உள்ளது.