டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை நடைபெற்ற ஹாக்கி போட்டியில், ஜெர்மணியை தோற்கடித்து இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. 41ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ஒலிம்பிக்கில் சாதனை படைத்துள்ளது இந்தியர்களிடைய பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டோக்கியோவில் நேற்று காலை நடைபெற்ற ஹாக்கி அரையிறுத்திப்போட்டி இந்திய – பெல்ஜியம் இடையே நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய முதலே ஆக்ரோசமாக நடைபெற்றது. ஆனால், இந்தியா தோல்வியை சந்தித்தது. இதையடுத்து வெண்கலப்பதக்கத்துக்கான போட்டி இன்று காலை ஜெர்மனியுடன் ஆவேசமாக நடைபெற்றது. கடைசி 6 விநாடிகள் ஜெர்மனிக்கு பெனாட்டி கிடைத்தது மிகவும் பரபரபபாக காணப்பட்டது. இருந்தாலும் இந்திய அணி அதை தடுத்து தனது வெற்றியை உறுதி செய்தது.
இதில் இந்தியா 5 கோல் அடித்து வெற்றிபெற்று சாதனை படைத்தது. 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா அமோகமாக வெற்றி பெற்று வெண்கலம் சென்று சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில் இந்தியா உலக அணிகளுக்கு சிம்மசொப்பனாக வலம் வந்தது ஒருகாலம். முதன்முதலாக ஒலிம்பிக் ஹாக்கியில் வெற்றியாளராக, இந்திய அணி 8 தங்கம் உள்ளிட்ட 11 பதக்கங்களை வென்றுள்ளது. கடைசியாக 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றது. அதன்பின் 41 ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் பங்கேற்றாலும் அதனால் ஒரு பதக்கம்கூட பெற முடியாத நிலை தொடர்ந்து வந்தது.
ஆனால், தற்போது 41 ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெண்கலத்தை இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. 49 ஆண்டுகளுக்குப் பின் இந்த முறை அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி பதக்கத்தோடு நாடு திரும்புகிறது.
இந்திய அணித்தரப்பில் சிம்ரன்ஜித்சிங் 2 கோல்கள் அடித்தார், ஹர்திக் சிங், ஹர்மன்பிரீத் சிங், ரூபேந்திர பால்சிங் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணியின் வரலாற்று சாதனை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.