
பெங்களூரு:
உச்சநீதி மன்ற உத்தரவுபடி இன்று கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இதன் காரணமாக இன்று காலை 11 மணிக்கு கர்நாடக சட்டமன்றம் கூடுகிறது. அதைத்தொடர்ந்து சட்ட மன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன்பிறகு மாலை 4 மணி அளவில் கர்நாடக முதல்வர் நம்பிக்கை வாக்கு கோருகிறார்.

இந்நிலையில், கர்நாடகாவின் குதிரை பேரத்தில் சிக்காமல் இருக்க காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் எம்எல்ஏக்களை கட்சி தலைவர்கள் ஐதராபாத்துக்கு அழைத்துச்சென்று அங்குள்ள கிருஷ்ண ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.. இன்று சட்டமன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஏதுவாக அவர்கள் இன்று அதிகாலை பெங்களூர் திரும்பினர்.
[youtube-feed feed=1]