வரலாற்றில் இன்று, அக்டோபர் 17

Must read

வரலாற்றில் இன்று, அக்டோபர் 17
அக்டோபர் 17 (October 17) கிரிகோரியன் ஆண்டின் 290 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 291 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 75 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1091 – லண்டனில் பெரும் சூறாவளி இடம்பெற்றது.
1346 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வேர்ட் ஸ்கொட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் லண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான்.
1448 – கொசோவோவில் ஹங்கேரிய இராணுவம் ஒட்டோமான் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.
1604 – ஜெர்மனிய வானிலையாளர் ஜொகான்னஸ் கெப்லர் வானில் திடீரென மிக ஒளிர்வுள்ள விண்மீன் (எஸ்.என். 1604) தோன்றுவதைக் கண்டார்.
1610 – பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.
1660 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1662 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ் டன்கேர்க் நகரை 40,000 பவுணிற்கு பிரான்சுக்கு விற்றான்.
1800 – டச்சு குடியேற்ற நாடான குரக்காவோ இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் வந்தது.
1805 – நெப்போலியனின் போர்கள்: ஊல்ம் நகரில் இடம்பெற்ற சமரில் ஆஸ்திரியப் படையினர் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகளிடம் வீழ்ந்தன.
1806 – எயிட்டியின் மன்னன் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டான்.
1907 – மார்க்கோனி அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.
1912 – முதலாம் பால்க்கன் போர்: பல்கேரியா, கிரேக்கம், சேர்பியா ஆகியன ஒட்டோமான் பேரரசுடன் போரை அறிவித்தன.
1917 – முதலாம் உலகப் போரில் ஜெர்மனி பிரித்தானியா மீதான தனது முதலாவது குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியது.
1933 – அல்பேர்ட் ஐன்ஸ்டைன் நாசி ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.
1941 – இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக ஜெர்மனிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.
1961 – பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1965 – 1964 நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர்.
1966 – நியூயோர்க்கில் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.
1979 – அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1995 – யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.
1998 – நைஜீரியாவில் பெற்றோலியம் குழாய் வெடித்ததில் 1200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்ட்னர்.
2003 – தாய்ப்பே 101 உலகின் மிக உயரமான வானளாவி ஆனது.
2006 – ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் தொகை 300 மில்லியனை எட்டியது.
2006 – ஈழப்போர்: புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.
பிறப்புக்கள்
1817 – சையது அகமது கான், இந்திய மெய்யியலாளர் (இ. 1898)
1906 – கே. பி. ஹரன், இந்திய-ஈழப் பத்திரிகையாளர் (இ. 1981)
1912 – முதலாம் ஜான் பால் (திருத்தந்தை) (இ. 1978)
1913 – பூரணி, தமிழக எழுத்தாளர் (இ. 2013)
1915 – ஆர்தர் மில்லர், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2005)
1940 – சுவ்ரா முகர்ஜி, இந்திய எழுத்தாளர், ஓவியர் (இ. 2015)
1948 – ராபர்ட் ஜோர்டான், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)
1959 – அமீனா குரிப், மொரிசியசின் குடியரசுத் தலைவர், உயிரியற் பல்வகைமையாளர்
1965 – அரவிந்த டி சில்வா, இலங்கைத் துடுப்பாளர்
1970 – அனில் கும்ப்ளே, இந்தியத் துடுப்பாளர்
1972 – எமினெம்ரமெரிக்க ராப் இசைக்கலைஞர்
1983 – பெலிசிட்டி ஜோன்ஸ், ஆங்கிலேய நடிகை
இறப்புகள்
532 – இரண்டாம் போனிஃபாஸ் (திருத்தந்தை)
1849 – பிரடெரிக் சொப்பின், போலந்து செவ்விசைக் கலைஞர் (பி. 1810)
1887 – குசுத்தாவ் கிர்க்காஃப், செருமானிய இயற்பியலாளர் (பி. 1824)
1920 – ஜான் ரீட், அமெரிக்கப் பத்திரிகையாளர், கவிஞர் (பி. 1887)
1981 – கண்ணதாசன் கவிஞர் (பி. 1927)
2014 – மசாரு இமோடோ, சப்பானிய எழுத்தாளர் (பி. 1943)
சிறப்பு நாள்
உலக வறுமை ஒழிப்பு நாள்

More articles

Latest article