சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 509 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,37,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,345 பேர் உயிர் இழந்து 8,20,331 பேர் குணம் அடைந்து தற்போது 4,601 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,30,982 பேர் பாதிக்கப்பட்டு 4,097 பேர் உயிர் இழந்து 2,25,325 பேர் குணம் அடைந்து தற்போது 1,560 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 54,282 பேர் பாதிக்கப்பட்டு 671 பேர் உயிர் இழந்து 53,182 பேர் குணம் அடைந்து தற்போது 429 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 51,457 பேர் பாதிக்கப்பட்டு 766 பேர் உயிர் இழந்து 50,334 பேர் குணம் அடைந்து தற்போது 357 பேர் சிகிச்சையில் உள்ளனர்.