சென்னை

மிழகத்தில்  இன்றைய (23/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1,437 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,69,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,618 பேர் உயிர் இழந்து 8,48,041 பேர் குணம் அடைந்து தற்போது 9,145 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 532 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,42,647 பேர் பாதிக்கப்பட்டு 4,206 பேர் உயிர் இழந்து 2,35,000 பேர் குணம் அடைந்து தற்போது 3,441 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 57,413 பேர் பாதிக்கப்பட்டு 688 பேர் உயிர் இழந்து 55,900 பேர் குணம் அடைந்து தற்போது 825 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 54,618 பேர் பாதிக்கப்பட்டு 805 பேர் உயிர் இழந்து 52,904 பேர் குணம் அடைந்து தற்போது 825 பேர் சிகிச்சையில் உள்ளனர்.