சென்னை

மிழகத்தில்  இன்றைய (04/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 21,228 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 12,49,292 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 14,613 பேர் உயிர் இழந்து 11,09,450 பேர் குணம் அடைந்து தற்போது 1,25,230 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 6,228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 3,58,573 பேர் பாதிக்கப்பட்டு 4,894 பேர் உயிர் இழந்து 3,20,457 பேர் குணம் அடைந்து தற்போது 33,222 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 86,265 பேர் பாதிக்கப்பட்டு 981 பேர் உயிர் இழந்து 75,621 பேர் குணம் அடைந்து தற்போது 9,663 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 84,206 பேர் பாதிக்கப்பட்டு 733 பேர் உயிர் இழந்து 74,877 பேர் குணம் அடைந்து தற்போது 8,596 பேர் சிகிச்சையில் உள்ளனர்.