சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 196 பேரும் கோவையில் 220 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,997 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 25,69,398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 34,230 பேர் உயிர் இழந்து 25,15,030 பேர் குணம் அடைந்து தற்போது 20,138 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,39,105 பேர் பாதிக்கப்பட்டு 8,327 பேர் உயிர் இழந்து 5,28,891 பேர் குணம் அடைந்து தற்போது 1,887 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.  ஆனால்  இன்று இங்கு 220 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,30,463 பேர் பாதிக்கப்பட்டு 2,188 பேர் உயிர் இழந்து 2,26,158 பேர் குணம் அடைந்து தற்போது 2,117 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,62,584 பேர் பாதிக்கப்பட்டு 2,409 பேர் உயிர் இழந்து 1,58,947 பேர் குணம் அடைந்து தற்போது 1,228 பேர் சிகிச்சையில் உள்ளனர்.