சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 111 பேரும் கோவையில் 117 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 990 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 27,03,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 36,136 பேர் உயிர் இழந்து 26,56,168 பேர் குணம் அடைந்து தற்போது 11,309 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,54,778 பேர் பாதிக்கப்பட்டு 8,549 பேர் உயிர் இழந்து 5,44,838 பேர் குணம் அடைந்து தற்போது 1,391 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 117 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,46,897 பேர் பாதிக்கப்பட்டு 2,419 பேர் உயிர் இழந்து 2,43,201 பேர் குணம் அடைந்து தற்போது 1,277 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,71,862 பேர் பாதிக்கப்பட்டு 2,510 பேர் உயிர் இழந்து 1,68,425 பேர் குணம் அடைந்து தற்போது 927 பேர் சிகிச்சையில் உள்ளனர்.