டில்லி

ன்று மகாராஷ்டிராவில் 3717, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 506 கர்நாடகாவில் 1196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,717 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 18,80,416 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 70 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 48,209 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,083 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 17,57,005 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 74,104 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,75,531 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,057 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 613 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,72,636 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 4,966 பேர் சிகிச்சையில் உள்ளனர்.அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகா மாநிலத்தில் இன்று 1196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.இதுவரை 9,01,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 5 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதுவரை 11,944 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,036 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 9,01,410 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 11,944 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கர்நாடகா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.