சென்னை

ன்று நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் திடீரென ரட்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தற்போது திடீரென பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாஜகவின் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.