டில்லி
இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மூத்த குடிமக்களுக்கான எல்டர் லைன் எனப் பெயரிடப்பட்டுள்ள ஹெல்ப்லைனை தொடங்கி வைக்கிறார்.

இன்று (அக்டோபர் 1) சர்வதேச முதியோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. நமது நாட்டில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பல விதங்களில் உதவிகளை எதிர்பார்த்து வருகின்றனர். இந்திய அரசு அவர்களுக்கு உதவ எல்டர் லைன் என்னும் பெயரில் ஹெல்ப் லைன் வசதியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அதிகாரம் அளித்தல் மற்றும் சமூகநீதி அமைச்சகம் இந்த வசதியை அளித்துள்ளது,
இதை இன்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைக்கிறார். மத்திய அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மூத்த குடிமக்களுக்கு உதவத் தனித்துவமான எண் (14567), ஒரே அழைப்பு மேலாண்மை ஆகியவற்றைக் கொண்டு, தேசிய அளவிலான கட்டமைப்பின் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில உதவி மையங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த ‘எல்டர் லைன்’ என்னும் உதவி மையம் வாரத்தின் 7 நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். இதனை. 14567 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இரண்டு முக்கிய பிரிவுகளை இந்த வசதி கொண்டுள்ளது.
ஒன்று முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அதிகாரிகள் அறிந்து கொள்வதற்கான ஒரு இணைப்பு மையமாகவும் மற்ரது மூத்த குடிமக்கள் கோரிய சேவைகளுக்கான கள ஆதரவை இந்த மையம் அளிப்பதாகவும் விளங்கும்.
எல்டர் லைன் என்னும் இந்த வசதி மூலம் தெலங்கானா, தமிழ்நாடு, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மூத்த குடிமக்கள் 14567 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]