சென்னை

ன்று தமிழகத்தில் கொரோனா தொடர்பான ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.   எனவே கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலாக்கப்பட்டது.   தற்போது கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.  இதையொட்டி தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்து ஊரடங்கை நீட்டித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.  தினசரி பாதிப்பு 1500ஐ நெருங்கிய நிலையில் தற்போது தமிழகத்தில் தினசரி பாதிப்பு 1600 முதல் 1700 வரை ஆகி உள்ளது. இன்று ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

இன்று பகல் 12.30 மணிக்கு முதல்வரின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள தமிழக தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வருடன் துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.