திருப்பதி

ன்றுடன் திருப்பதியில்  பிரம்மோற்சவம் முடிவடகிறது.

கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கியது. இந்த பிரம்மோற்சவ நாட்களில் ஏழுமலையான் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவை முன்னிட்டு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் குறைந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஏழுமலையான் பிரம்மாண்ட தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு நேற்று காலை அருள் பாலித்தனர். இரவு அஸ்வ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் பவனி வந்தார். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து இருந்த கலைக் குழுவினர் இதில் கலை நிகழ்ச்சிகள் செய்து பக்தர்களைப் பரவசப்படுத்தினர்.

பிரம்மோற்சவ விழா நிறைவு நாளான இன்று காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி ஏழுமலையான் சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட உற்சவமூர்த்திகள் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்கத் தீர்த்தவாரி நடைபெறும் புஷ்கரணிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு உற்சவ மூர்த்திகளுக்குச் சந்தனம், மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது.

பிறகு உற்சவமூர்த்திகள் கோவில் மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்டுச் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடந்தது. இதைத் தொடர்ந்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்த பிறகு புஷ்கரணியில் நீராடப் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. குளத்தில் அருகே காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் நீராடினர். இன்று இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

[youtube-feed feed=1]