சென்னை

சென்னையில் நடைபெறும் ராஜஸ்தான் சென்னை அணிகளுக்கான போட்டிக்கான டிக்கட் விர்பனை இன்று தொடங்குகிறது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில், வரும் 12 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இன்று இந்த போட்டிக்கான டிக்கெட்  விற்பனை செய்யப்படுகிறது., காலை 10.40 மணிக்கு பேடிஎம் மற்றும் http://www.insider.in தளத்தில் விற்பனை தொடங்கும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த போட்டிக்கான டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.