சென்னை

ன்று தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யலாம் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தவிர வரும் 24, 25, 26-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தலைநகர் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மத்திய கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.   ஆகவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.