டில்லி
நாடாளுமன்றத்தில் இன்று 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
நேற்று நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது உரையுடன் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். இன்று அதாவது பிப்ரவரி 1 ஆம் தேதி 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்கிறார்.
இன்று காலை 11 மணிக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையைத் தக்கல் செய்ய உள்ளார். இந்த நிதிநிலை அறிக்கை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் நான்காம் நிதிநிலை அறிக்கை ஆகும்.
தற்போது உத்தரப்பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளது. எனவே இந்த தேர்தல்களை கருத்தில் கொண்டு பாஜக அரசு பல புதிய திட்டங்களை அறிவித்து மக்களைக் கவர முயலும் எனக் கூறப்படுகிறது.