டெல்லி: இன்று பார்லிமென்டில் அன்னதாதா என்ற பெயரில் சூரியன் உதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை வழக்கமான நடைமுறைகளுடன் தொடங்கியது. ஆனால்,   அவை தொடங்கிய சிறிது நேரத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிள், தங்களது ஒத்திவைப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டதால்,   அவை முடங்கியது. இதனால் 12மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக ராகுல்காந்தி தனது சமூக வலைதள பக்கமான டிவிட்டரில் போட்டுள்ள பதிவில், பார்லிமென்டில் இன்று அன்னதாதா என்ற பெயரில் சூரியன் உதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாட்டிற்கு உணவு வழங்கும் (அன்னம்)  ஓராண்டு காலமாக விவசாயிகள் போராடி வந்த நிலையில், அதை வாபஸ் பெறுவதாக பிரதமர் அறிவித்தார். அதையடுத்து, இன்றைய அமர்வில் வேளாண் சட்ட வாபஸ் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுகுறித்து ராகுல் டிவிட் பதிவிட்டுள்ளார்.

விவசாயிகளின் சத்தியாகிரக போராட்டத்துக்கு தலைகுனிந்தார் பிரதமர் மோடி! விவசாயிகளுக்கு வாழ்த்துகள்! ராகுல்காந்தி