சென்னை

ன்று சென்னை சென்டிரலில் இருந்து அதிவிரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 

 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்

”சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) இரவு 11 30 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்.06055) நாளை மதியம் 12 30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு சென்னை ஆவடி வரும் ஏ சிஅதிவிரைவு சிறப்பு ரயில் (06056) நாளை மறுநாள் காலை 5.10 மணிக்கு ஆவடி வந்தடையும்.

இந்த ரயில் சென்டிரலில் இருந்து நாகர்கோவில் செல்லும் போது ஆவடி செல்லாது. நாகர்கோவிலில் இருந்து வரும் போது ஆவடி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். சென்டிரல் ரெயில் நிலையம் செல்லாது.

சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் 21-ம் தேதி மாலை 3 45 மணிக்கு புறப்பட்டு கேரள மாநிலம் கொச்சுவேலி செல்லும் ஏ சி எக்ஸ்பிரஸ் ரயில் (06043) நாளை காலை 8 30 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.

மறுமார்க்கமாக, கொச்சுவேலியிலிருந்து நாளை (வியாழக்கிழமை) மற்றும் 22-ம் தேதி மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் ஏ சிஎக்ஸ்பிரஸ் ரயில் (06044) நாளை மறுநாள் காலை 11.25 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

கொச்சுவேலியிலிருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் கூடுதலாக பெரம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.