டில்லி

ன்று சோனியா காந்தி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இன்று இந்த  சிறப்புக் கூட்டம் தொடர்பாகக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன். காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய மக்களின் பிரச்சினைகள் என்ன? மத்திய அரசு முக்கிய மசோதாக்களைக் கொண்டு வந்தால் எப்படி எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.