நீலகிரி

ற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கூடலுர், பந்தலுர் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்த்ன் மற்ற பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் ம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியில், ஜூலை 2ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இங்கு நேற்று இரவு முதல் பெய்யத் தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. குறிப்பாக கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை இரவு முழுவதும் கனமழை பெய்தது.

நீலகிரி மாவட்டத்தில் அதிகாலை முதல் கனமழை பெய்து அதிகபட்சமாக தேவாலாவில் 186 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. எனவே கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே கனமழை காரணமாக நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்திருந்த நிலையில், இரண்டாம் நாளாக இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.