சென்னை: தமிழகத்தில் இன்றுமுதல் 4ந்தேதிரை பல  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும்   விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் நோக்கிவீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 04.07.2024 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் இன்று (ஜூலை 01) ஒருசில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

01.06.2024 முதல் 04.07.2024 வரை அடுத்த 4 தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்க கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னதுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 செல்சியஸை ஒட்டியும் குறைந்த பட்ச வெப்பநிலை 20-25 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை (ஜூலை 2) முதல் ஜூலை 6ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துeடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனைஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும், ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் இன்று முதல் 4 ஆம் தேதி வரை மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சூறாவளிக் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அம்மாவட்டத்தின் கூடலுர், பந்தலூர் தாலுகாக்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (ஜூலை 01) ஒருநாள் விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.