சென்னை

சென்னை, மதுரை திருமங்கலம்,மற்றும் திருவண்ணாமலையில் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று முன் தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளன.  இந்த தேர்தல் வாக்குப்பதிவு ஒரு சில இடங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் அமைதியாகா= நடந்து முடிந்தன.   இந்த ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவின் போது குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.  அதையொட்டி இங்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையொட்டி இன்று சென்னையில் வண்ணாரப்பேட்டை 51 ஆம் வார்டு, பென்சர் நகர் ஓடைக்குக்குப்பம் 179 ஆம் வார்டில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இதைப் போல் மதுரை திருமங்கலம் நகராட்சி 16 ஆம் வார்டு மற்றும் திருவண்ணாமலை நகராட்சி 25 ஆம் வார்டு ஆக மொத்தம் 5 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையொட்டி இந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதே வேளையில் இவ்வாறு மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.