சென்னை

னமழை காரணமாக இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடையத் தொடங்கி இருக்கிறது.  தற்போது தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழகம், புதுச்சேரியில் இன்று  முதல் 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இன்று, உயர்கல்வி வகுப்புகளுக்கு நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.