டெல்லி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை கைதை எதிர்க்கும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்தார். நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு இந்த மனுவை விசாரித்தது.
கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 19-ன் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததன் மூலம் கெஜ்ரிவாலை கைது செய்ததில் அமலாக்கத்துறை தவறு செய்ததாக குற்றம் சாட்டி இருந்தார்.
கடந்த மே மாதம் இந்த வழக்கின் விசாரணை முடிந்து அதனைத் தொடர்ந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இன்று இந்த வழக்கில் உச்சநீதிமன்ற்ம் தீர்ப்பளிக்க உள்ளது.