பரிமலை

ன்று மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக இன்று திறக்கப்படுகிறது.. கடந்த மாதம் 21-ந்தேதியுடன் நிறைவடைந்த மண்டல, மகரவிளக்கு சீசனில் 52 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 5 மணிக்குத் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து 18-ந்தேதி வரை 5 நாட்கள் நெய்யபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

பக்தர்கள் இணையம் முன்பதிவு,  உடனடி முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.  ஐயப்ப பக்தர்களின் வசதிக்காகக் கேரள அரசு சார்பில் பத்தனம் திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உள்பட முக்கிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.