டெல்லி
நாளை போப் ஆண்டவரின் இறுதிச்சடங்கு நடைபெறுவதையொட்டி இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வாடிகனுக்கு சென்றுள்ளார்.

கடந்த 21ம் தேதி கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
போப் பிரான்சிஸ் உடல் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்ற்ஃபும் உல்க நடுகளின் தலைவர்கள் இன்றும், நாளையும் பொதுமக்கள், உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுததுகின்றனர்.
நாளை நடைபெறும் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். எனவே அவர் இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வாடிகன் புறப்பட்டு சென்றார். அவருடன் மத்திய அமைசர்கள்கள் கிரன் ரிஜிஜு, ஜார்ஜ் குரியன், கோவா சட்டசபை துணை சபாநாயகர் ஜோஸ்வா டி சுசா ஆகியோரும் வாடிகன் புறப்பட்டு சென்றனர்.