கன்னியாகுமரி
இன்று தேர்தல் பிரசாரத்துக்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.
ஓரிரு நாட்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழலில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே தமிழகத்தைக் குறி வைத்து திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை போன்ற பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவு திரட்டிச் சென்றார்.
இன்று கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இன்று காலை அவர் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 11 மணிக்குக் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்துக்கு வருகிறார்.
பிரதமர் மோடி கார் மூலம் அங்கிருந்து புறப்பட்டு பொதுக்கூட்ட மேடைக்குச் சென்று பாஜக கூட்டணிக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார். கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொள்கிறார்கள்