டில்லி

ன்று எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கருப்பு உடையில் பங்கேற்கின்றனர்..

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இன்று இந்த பிரச்சினையில் விவாதத்தை அனுமதிக்காதது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதத்தைத் தொடங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடை அணிந்து கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

‘இந்தியா’ கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள், தங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

நேற்று காலையில் எதிர்க்கட்சித்தலைவரின் அறையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.