டெல்லி

ன்று மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராஅன் பொறுப்ப்பேற்றார்.

The Union Minister for Finance and Corporate Affairs, Smt. Nirmala Sitharaman addressing a Press Conference, in New Delhi on June 28, 2021.

நாடாளுமன்ற தேர்தலில் தனி மெஜாரிட்டியை பெறாவிட்டாலும், கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைத்துள்ளது. ந்த ஜூன் 9ம் தேதி டெல்லியில் நடந்த பிரம்மாண்ட விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவரை தொடர்ந்து, அவரது தலைமையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை ய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

10ம் தேதி புதிய  அமைச்சர்களின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு மத்திய ய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. அதன்படி நிதி, வெளியுறவு, பாதுகாப்பு மற்றும் உள்துறை ஆகிய 4 முக்கிய துறைகளை பா.ஜ.க. தன்னிடமே வைத்து கொண்டுள்ளது. உள்துறை அமைச்சராக அமித்ஷாவும், பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங்கும், நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமனும், வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கரும் மீண்டும் பொறுப்பேற்று கொண்டனர்.

இன்று நிர்மலா சீதாராமன் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்  இன்று. அலுவலகம் வந்த அவரை நிதித்துறை செயலாளர் டி.வி. சோமநாதன் மற்றும் பிற உயர் அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், தனது ஏழாவது பட்ஜெட்டையும், ஆறாவது முழு பட்ஜெட்டையும் தொடர்ச்சியாக தாக்கல் செய்ய உள்ளார். நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார்.