பாரிஸ், ஃப்ரான்ஸ்

ஜூன் 21ஆம் தேதி சர்வதேச இசை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது

நமது இந்தியாவில் இன்று சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருவது தெரிந்ததே.  ஆனால் இன்றுதான் சர்வ தேச இசை தினமும் கொண்டாடப்படுகிறது.

இந்த இசை தினத்தை பற்றி பார்ப்போம்

சர்வதேச இசை தினம் 1982 ஆம் வருடம் ஃப்ரான்ஸ் தலைநகர் பாரிஸில் கொண்டாட ஆரம்பிக்கப் பட்டது.

இதை முதலில் ஃப்ரெஞ்சு மொழியில் ஃபெடெ டி லா மியூசிக் என்ற பெயரில் கொண்டாடினார்கள்.

இந்த சர்வதேச இசை தினம் ஃப்ரான்ஸின் முன்னாள் கலாச்சாரத்துறை அமைச்சர் ஜாக் லாங்க் என்பவரின் கனவு ஆகும்.

இந்த தினம் உலகெங்கும் உள்ள 120 நாடுகளிலுள்ள 700 நகரங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

மற்ற விழாக்களைப் போல இல்லாமல் இந்த விழா, பாடத் தெரிந்தவரெல்லாம் பாடலாம் என கொண்டாடப்பட்டு வருகிறது,