டெல்லி

ன்று காலை பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்ட்ம  நடைபெற உள்ளது.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர்.  இந்தியா பாகிஸ்தானுடனான உறவை முற்றிலுமாக துண்டித்தது.

வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது., பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனவே இரு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது

இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்னும்  பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்து வருகிறது.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 11  மணிக்கு பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.