டெல்லி

ன்று காலை டெல்லியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது/

இன்று காலை 5.36 மணியளவில் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ள இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. டெல்லியின் சுற்றுப்புறங்களிலும் இந்நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த மக்கள் இதனால் அச்சமடைந்து தஞ்சம் தேடி வீடுகளை விட்டு வெளியே வந்தனர். மேலும் டெல்லி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பயணிகளும் நிலநடுக்கம் உணரப்பட்டது என தெரிவித்து உள்ளனர். ரயில்வே நிலையத்தில் உள்ள கடைகளில் நின்றிருந்தவர்கள் நிலநடுக்கம் ஏற்பட்டதும் அலறியடித்தபடி ஓடினர்.

ரயில் பயணிகளில் சிலர்

“ரயிலுக்காக காத்திருந்தபோது, கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரயில் நிலையத்திற்கு கீழே வேறு ஏதேனும் ரயில் செல்கிறதோ என்று அச்சமடைந்து விட்டோம்/. இதுபோன்று இதற்கு முன்பு வலிமையாக நிலநடுக்கம் நாங்கள் உணர்ந்ததில்லை. முழு கட்டிடமும் குலுங்கியது

எனக் கூறியுள்ளனர்

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.