ண்டிகர்

ன்று காலை பஞ்சாப் மாநில புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்கிறார்.

பஞ்சாபில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, அமரிந்தர் சிங் தனது முதல்வர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இதையொட்டி பஞ்சாப் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்தன.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாகக் கட்சியின் மூத்த தலைவர் ஹரீஷ் ராவத் டிவிட்டரில் தகவல் வெளியிட்டார். அம்மாநிலத்தின் முதல் பட்டியலினத்தைச் சேர்ந்த முதலமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

முதல்வர் பதவிக்கு அவரது பெயர் அறிவிக்கப்பட்டதை அடுத்து, எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன், சரண்ஜித் சிங், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையொட்டி இன்று அதாவது திங்கள் கிழமை காலை முதலமைச்சராக அவர் பதவியேற்கவுள்ளார்.

பஞ்சாப் மாநில புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சரண்ஜித் சிங் க்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  தொடக்கத்தில் முதல்வர் பதவிக்கான போட்டியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுக்ஜிந்தர் சிங் ரந்த்வா பெயர் முன்னிலையில் இருந்தது.

பிறகு சரண்ஜித் சிங் சன்னியின் பெயர் அறிவிக்கப்பட்டதும், அதைத் தாம் மனதார வரவேற்பதாக சுக்ஜிந்தர் சிங் தெரிவித்தார்.  முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சரண்ஜித் சிங் மாநிலத் தலைவர் சித்துவுக்கு நெருக்கமானவர் என்றும், அமரிந்தர் சிங்கை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.