திருச்செந்தூர்

இன்று திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் மாசித் திருவிழா தொடங்கி உள்ளது,

ஆறுபடை வீடுகள் கொண்ட முருகப் பெருமானுக்குத் திருச்செந்தூர் 2ஆம் படைவீடு ஆகும்.  இங்குள்ள சுப்ரமணிய சாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும்.   இங்கு 12 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் மாசித் திருவிழாவில் தேரோட்டம் மிகவும் முக்கியமாகும்.

இந்த ஆண்டு மாசித் திருவிழா திருச்செந்தூரில் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.  சுப்ரமணிய சாமி ஆலயத்தில் உள்ள கொடி மரத்தில் இன்று அதிகாலை 5.30 மணிக்குக்  கொடி ஏற்றப்பட்டது.  அப்போது அங்குக் கூடி இருந்த பக்தர்களின் அரோகரா என்னும் முழக்கம் விண்ணைப் பிளந்தது.

இந்த மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.   பக்தர்களுக்கு இந்த ஆண்டு மாசித் திருவிழாவில் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   எனவே முருக பக்தர்கள்  இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.