டெல்லி
இன்று தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கமலஹாசன் உள்ளிட்டோர் மாநிலங்களவை எம் பிகள்க் பதவி ஏற்கின்றனர்.

தமிழகத்திலிருந்து தி.மு.க சார்பில் பி.வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும், தி.மு.க கூட்டணி சார்பில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியின் ஆதரவுடன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்
அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றனர். இன்று இவர்கள் அனைவரும் டெல்லியில் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பதவிப் பிரமாணம் எடுத்து, மாநிலங்களவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்கின்றனர்.
அதிமுகவின் இன்பதுரை, தனபால் வரும் திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கமலஹாசன் செய்தியாளர்களிடம்.
“மக்களின் வாழ்த்துகளுடன் டெல்லியில் உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன். இது எனக்கு இந்தியனாக கொடுக்கப்பட்டு இருக்கும் மரியாதை மற்றும் கடமையை நான் செய்ய உள்ளேன். இதை நான், பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.”
என்று கூறினார்.
[youtube-feed feed=1]