கொல்கத்தா:

திரிபுராவில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. அங்கு வைக்கப்பட்டிருந்த கம்யூனிச தலைவர் லெனின் சிலை அகற்றப்பட்டது.

இந்நிலையில் மேற்கு வங்கம் மாநிலம் பாங்குராவில் பொதுகூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், “லெனின் சிலையை உடைத்ததை சகித்துக்கொள்ள முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நமது அரசியல் எதிர்க்கட்சியினர். லெனின் எனது தலைவர் இல்லை.

ஆனால் மார்க்ஸ் மற்றும் லெனின் சிலைகளை உடைப்பதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்காக எதிராளிகளை துன்புறுத்த வேண்டும். சிலைகளை தகர்க்க வேண்டும் என்பது கிடையாது. இன்று லெனின் சிலை. நாளை காந்தி, நேதாஜி அல்லது சுவாமி விவேகான்நதர் சிலைகள் இலக்காக நிர்ணயம் செய்யப்படலாம்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில்,‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எங்களது தொண்டர்களை துன்புறுத்தியது. கொலை செய்தது. ஆனால் நாங்கள் அவர்களை பழிவாங்கவில்லை. மத்திய அரசை முடிவுக்கு கொண்டு வருவதே எங்களது நோக்கம்’’ என்றார்.