டெல்லி: மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை விண்ணப்பம் பதிவு செய்யாதவர்கள், இன்று இரவுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளிள்ல சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்மூலமே நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது.
அந்த வகையில் 2025ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தேதிகள் கடந்த மாதம் தேசிய தேர்வு முகமை சார்பில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 2025ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு பிப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 7 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது. ஒரு மாதம் வரை நீட்தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி இன்று மார்ச் 7 ம் தேதியாகும். இதனால் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாளாகும்.நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது.
தேர்வர்கள், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும்.
அதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள், வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதியும்,
தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற மே மாதம் 1-ந் தேதியும் வெளியிடப்படும்.
பிறகு மே 4ம் தேதி இளநிலை நீட் தேர்வு என்பது நாடுமுழுவதும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.