
சென்னை:
அண்ணா பல்கலைக்கழகம் மூலம் அதன் உறுப்பு கல்லூரிகளில் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்.
ஏற்கனவே கடந்த 30ந்தேதியுடன் விண்ணப்பம் அனுப்புவதற்கான கால அவகாசம் முடிவடைய இருந்த நிலை யில், தூத்துக்குடி கலவரம் காரணமாக மேலும் 3 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்ட ஜூன் 2ந்தேதி வரை நீட்டிப்பாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
இதுவரை, ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 971 பேர் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், ஜுன் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பும், ஜூலை மாதத்தில் கலந்தாய்வும் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ள படி இந்த ஆண்டு கலந்தாய்வும் ஆன்லைன் மூலமே நடைபெற உள்ளது.
[youtube-feed feed=1]