சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்  “ருத்ராஜ் கெய்க்வாட்”டுக்கு இன்று 25வது பிறந்தநாள். இதையொட்டி சமூக வலைதளங்களில் சிஎஸ்கே ரசிகர்கள் உள்பட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக ஆடி வந்தவர் ருத்ராஜ் கெய்க்வாட். அவரது 25வது பிறந்தநாள் இன்று. இதையொட்டி,  சிஎஸ்கே ரசிகர்கள் ருத்ராஜின் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். மேலும் நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

ஐபிஎல் 13வது சீசனில் இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட்  தொடர்ந்து மூன்று அரை சதங்கள் அடித்து தொடக்க வீரராக தன்னை தக்க வைத்துக் கொண்டார்.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக ஒரு அரை சதத்தை அடித்தார், மேலும் அதைத் தொடர்ந்து இரண்டு 50 பிளஸ் ஸ்கோருடன்  2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரை முடித்தார்.

அதைத்தொடர்ந்து 2021 ஐபிஎல் போட்டியிலும்  தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து 5 போட்டிகளில் அரைசதம் அடித்து ரன்களை குவித்தார். மேலும் ராஜஸ்தான் அணியுடன் மோதிய போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இதன் காரணமாக 2021 ஐபிஎல் தொடரை தோனி தலைமையிலான சென்னை அணி வென்றது. இதற்கு ருத்ராஜ் பேட்டிங் முக்கிய பங்காக இருந்தது.

இவர் ஏற்கனவே  சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் டிராபி போன்ற உள்நாட்டுப் போட்டிகளில் இளம் வீரர் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். மேலும் இந்திய அணிக்கு தேர்வாகி தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை இலங்கை அணிக்கு எதிராக விளையாடினார்.

இன்று இவர் 25வது பிறந்தநாளை முன்னிட்டு சிஎஸ்கே  ரசிகர்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள அவரது தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுபோல சிஸ்கே அணி வீரர்கள் உள்பட கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.