ம்மு

டந்த 2019 ஆம் ஆண்டு இதே தினத்தில் நடண்ட்க புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது..  இந்த நாளை உலகின் பல பகுதியில் உள்ளோரும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.   ஆனால் 2019 ஆம் ஆண்டு இதே தினத்தன்று புல்வாமா தாக்குதல் நடந்து அதில் ராணுவ வீரர்கள் உயிர் நீத்தது இந்தியர்களை வேதனையில் ஆழ்த்தியது.

கடந்த 2019 ஆம் வருடம் இதே தினத்தன்று ஜம்மு வில் இருந்து ஸ்ரீநகருக்கு, துணை ராணுவப் படையான சி.ஆர்.பி.எப்., வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.  அந்த நேரத்தில் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காரை மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.  இதில், 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் அண்டை நாடான பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்தப்பட்டது.   இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக, நம் ராணுவம், ‘சர்ஜிகல்’ ஸ்டிரைக்’ எனப்படும் துல்லிய தாக்குதலை நடத்தி, பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது.   இன்று இந்த புல்வாமா தாக்குதலின் 3ஆம் ஆண்டு நினைவு தினமாகும்.

இதையொட்டி, புல்வாமாவில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். அந்த படையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல், டி.எஸ். சவுத்ரி தலைமையில், வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு, பிரதமர் மோடி,ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.