இன்றைய ஐபிஎல் – சென்னை vs பெங்களூரு மற்றும் பஞ்சாப் vs கொல்கத்தா மோதல்

Must read


துபாய்: இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில், பிற்பகல் 3.30 மணிக்கு பஞ்சாப் – கொல்கத்தா அணியும், இரவு 7.30 மணிக்கு சென்னை – பெங்களூரு அணியும் மோதுகின்றன.
பஞ்சாப் – கொல்கத்தா போட்டி அபுதாபியில் நடைபெறுகிறது. சென்னை – பெங்களூரு போட்டி துபாயில் நடைபெறுகிறது.
தற்போதைய நிலவரப்படி பஞ்சாப் அணி, ஒரேயொரு வெற்றியுடன் 2 புள்ளிகள் மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. சென்னை அணி 2 வெற்றிகள் மட்டுமே பெற்று, 4 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.
எனவே, சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில், இன்றையப் போட்டியில் வெல்வது கட்டாயம்!
 

More articles

Latest article