இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 1975ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி, தனது முதல் செயற்கைகோளான ஆரியபட்டாவை ஏவியது.
அப்போதைய சோவியன் யூனியனில் உள்ள கப்புஸ்டீன்யார் என்ற இடத்தில் உள்ள ஏவுகணை தளத்தில் இருந்து, கொஸ்மாஸ் -3 3எம் என்ற ஏவுகணை மூலம் ஆரியபட்டா செலுத்தப்பட்டது.
வானிலை ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் இந்த ஏவுகணை அனுப்பப்பட்டது. தனது பணிகளை, 1992ம் ஆண்டு பிர்பரவரி 11ம் தேதி வரை வெற்றிகரமாக செய்தது ஆரியபட்டா.
இன்று செயற்கைகோள் ஏவுவதில் பலவித சாதனைகள் படைத்திருக்கும் இந்தியவிண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு ஊக்கம் கொடுத்த முதல் முயற்சி ஆரியபட்டா ஆகும்.