டில்லி

க்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று இந்தியப் பிரதமர் மோடி பேச உள்ளார்.

இன்று உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.  இதையொட்டி ரஷ்ய ராணுவத்தினர் தரை வழி மற்றும் வான் வழி மூலம் அந்நாட்டின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.   நாடெங்கும் ரஷ்ய விமானங்கள் குண்டு மழை பெய்து வருகின்றன.  இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதனால் இரு தரப்பு ராணுவத்தினர் மட்டுமின்றி பொதுமக்களும் நூற்றுக் கணக்கில் உயிரிழந்துள்ளனர்  இந்நிலையில் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபருடன் பேசினால் இந்த போரை நிறுத்த முடியும் எனவும் மோடி சொன்னால் புதின் போர் நிறுத்தம் குறித்து அவசியம் யோசிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.  இதற்கு புதின் ஒப்புதல் அளித்து பேச்சு வார்த்தை நடந்தால் அப்போது மோடி உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபரிடம் கோரிக்கை விடுப்பார் எனவும் எதிர்பார்ப்பு உள்ளது.