டாக்கா
இன்று டாக்காவில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
வங்க தேச தலைநகர் டாக்காவில் 5 அணிகள் பங்கேற்கும் 6 ஆம் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறுகிறது. இன்று இந்த போட்டியின் கடை லீக் ஆட்டம் நடக்கின்றது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணியும் ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பான் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய அணி தென்கொரியாவுடன் மோதி 2-2 என டிராவை சந்தித்தது. அடுத்த ஆட்டங்களில் 9-0 என்ற கோல் கணக்கில் வங்க தேசத்தையும் 3-1 என்ற கணக்கில் பாகிஸ்தானையும் வென்றுள்ளது. இதைப் போல் ஜப்பான் அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான் (0-0) மற்றும் தென்கொரியா (3-3) என டிரா செய்தது. பிறகு வங்க் தேசத்தை 5-0 கணக்கில் வென்றுள்ளது.
இந்திய அணி ஏற்கனவே அரையிறுதி வாயப்பை உறுதி செய்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் லீக் சுற்றில் இந்திய அணி ஜப்பான் அணியை 5-3 என்னும் கணக்கில் தோற்கடித்துள்ளது. எனவே இந்திய அணி மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையே நடக்க உள்ள இன்றைய போட்டியில் விறுவிறுப்பு அதிகமாக உள்ளது.