ராஞ்சி
மீண்டும் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இன்று ஹேமந்த் சோரன் பதவி ஏற்கிறார்.’

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரும் ஆமாநிலட் முதல்வருமானஹேமந்த் சோரன் து நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஜனவரி 31-ம்தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் சம்பாய் சோரன் முதல்-மந்திரியானார். கடந்த 28-ம்தேதி ஜார்கண்ட்உயர்நீதிமன்றம் சுமார் 5 மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கியதனால் அவர் சிறையில் இருந்து விடுதலையானார்.
கட்சியினருக்கும், கூட்டணி தலைவர்களுக்கும் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலையானதால் அவர் மீண்டும் முதல்-மந்திரியாவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சி எம் எல் ஏ க்களின் கூட்டம் நேற்று சம்பாய் சோரன் வீட்டில் நடந்தது.
கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாகூர், மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது மிர் ஆகியோரும் பங்கேற்றனர். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக (முதல்-மந்திரி) ஹேமந்த் சோரனை தேர்வு செய்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு. இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜார்க்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் சி பி ராதாகிருஷ்ணனிடம் அவர் வழங்கிய பின்னர் ஹேமந்த் சோரன், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
மீண்டும் ஜார்கண்ட் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் இன்று மாலை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு அமைசர்களும் அவருடன் பதவியேற்க உள்ளனர். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மட்டுமின்றி கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]