ராமேஸ்வரம்

ன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று அவர்கள், நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிச்சென்று மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகை பறிமுதல் செய்தனர்.

அந்த படகில் இருந்த 8 மீனவர்களையும் கைது செய்து இலங்கை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், படகு கடலில் மூழ்கி மாயமான 2 மீனவர்களை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவும், மீட்கப்பட்ட 2 மீனவர்களை ராமேசுவரம் அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இன்று (புதன்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.